NATIONAL

சிலாங்கூர் சட்டமன்ற எதிர்க்ட்சித் தலைவராக அஸ்மின் அலி நியமனம்

19 செப்டெம்பர் 2023, 9:42 AM
சிலாங்கூர் சட்டமன்ற எதிர்க்ட்சித் தலைவராக அஸ்மின் அலி நியமனம்

ஷா ஆலம், செப் 19 - சிலாங்கூர் மாநில

பெரிக்கத்தான் நேஷனல் தலைவரும் உலு

கிளாங் சட்டமன்ற உறுப்பினருமான

டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி மாநில

எதிர்க்கட்சித் தலைவராக

நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலாங்கூர்

மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வேங்

சான் இன்று மாநில சட்டசபையின்

முதலாவது கூட்டத்தின் போது இந்த

அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி பெரிக்கத்தான் நேஷனல் சமர்ப்பித்த

கடிதத்தின்படி இப்பதவிக்கான ஒரே

வேட்பாளராக முன்னாள் சிலாங்கூர் மந்திரி

புசாரான அஸ்மின் விளங்குகிறார் என்பதை

லாவ் உறுதிப்படுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவராக டத்தோஸ்ரீ முகமது

அஸ்மின் அலியை நான் அறிவிக்கிறேன். அவர் தனது பொறுப்பை

சிறப்பாக ஆற்றுவார் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பரந்த அனுபவத்தை

அடிப்படையாகக் கொண்டு அஸ்மின்

அலியை எநிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு

முன்னாள் சபாநாயகர் இங் சுயி லிம்

முன்மொழிந்தார்.

ஜூன் மாதம் மாநில சட்டமன்றம்

கலைக்கப்படுவதற்கு முன் அதாவது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அமர்வின்

போது ​​சிஜாங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அகமது யூனுஸ் ஹைரியை

எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க அஸ்மின் பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பு, பாரிசான் நேசனல் பிரதிநிதியான

சுங்கை ஆயர் தாவார் சட்டமன்ற உறுப்பினர்

டத்தோ ரிசாம் இஸ்மாயில் எதிர்க்கட்சித்

தலைவராக இருந்தார். அவர் இப்போது

கிராம வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான

மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.