NATIONAL

பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராக சுஹைஸான் பதவியேற்றார்

19 செப்டெம்பர் 2023, 9:38 AM
பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராக சுஹைஸான் பதவியேற்றார்

கோலாலம்பூர், செப் 19- அமானா கட்சியின் ஜோகூர் மாநில துணைத்

தலைவரான சுஹைஸான் கையாட் மக்களவை உறுப்பினராக இன்று

பதவியேற்றுக் கொண்டார்.

பன்னிரண்டாவது மலேசியத் திட்டத்தின் மத்திய தவணைக்கான

மதிப்ப்பாய்வு மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் சபாநாயகர்

டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் முன்னிலையில் அவர் பதவி உறுதி மொழி

எடுத்துக் கொண்டார்.

ஐம்பது வயதான சுஹைஸான் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற

இடைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் சுஹைஸானுக்கு வாழ்த்துகளைத்

தெரிவித்துக் கொண்ட ஜோஹாரி, அவர் பணிகளைச் செவ்வனே

நிறைவேற்றுவார் எனத் தாம் எதிர்பார்ப்பதாக ச் சொன்னார்.

பூலாய் இடைத் தேர்தலில் 18,641 வாக்குகள் பெரும்பான்மையில்

பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் ஜூல்கிப்ளி ஜாபர் மற்றும் சுயேச்சை

வேட்பாளரான சம்சுடின் முகமது பவுஸி ஆகியோரை சுஹைஸான்

தோற்கடித்தார்.

உள்நாட்டு வர்த்த மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சரும் பூலாய்

நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி

உறுப்பினருமான டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கடந்த ஜூலை 23ஆம்

தேதி காலமானதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளிலும் இடைத்

தேர்தல் நடைபெற்றது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.