கோலாலம்பூர் செப் 19-
நியோஷ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு –
சுகாதார கழகம் மற்றும் மித்ராவுடன்
இணைந்து நடத்தப்படவிருக்கும் இந்திய
இளைஞர்களுக்கான தொழில் திறன் கல்வி
பயிற்சி திட்டம் அடுத்த மாதத்தில்
அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று
மனிதவள அமைச்சர் வ. சிவகுமார்
அறிவித்தார்.
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார
கழகத்தின் தலைமை செயல் முறை அதிகாரி
ஹாஜி ஆயோப்,பொது உறவு அதிகாரி
கானப்பிரகாஷ், பயிற்சி திட்ட பயிற்றுநர்
பரமேஸ்வரன் ஆகியோர் நேற்று மனித வள அமைச்சர் சிவகுமாரை
நேரில் சந்தித்து இந்த பயிற்சி திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க இதுவரை
1,100 இந்திய இளைஞர்கள் பதிவு
செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை
அளிக்கிறது என்று அமைச்சர் சிவகுமார்
தெரிவித்தார்.
கடந்த முறை வெறும் 170 பேர் மட்டுமே பதிவு
செய்தனர். ஆனால் இம்முறை இரண்டே
வாரத்தில் 1,100 இந்திய இளைஞர்கள் பதிவு
செய்தது இந்திய இளைஞர்கள் மத்தியில்
பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது
என்று அவர் சொன்னார்.
மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும்
நியோஷ் எனப்படும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் வழி
பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலை இடங்களில் அசாம்பாவிதங்கள்
நடைபெறாமல் தவிர்ப்பதற்கு இதுபோன்ற
பயிற்சிகள் முக்கியமாக விளங்கி வருகிறது.
அந்த வகையில் பிரதமர் துறையின் கீழ்
இயங்கி வரும் இந்திய உருமாற்ற
கழகம் (மித்ரா) – வேலையிட பாதுகாப்பு
மற்றும் சுகாதார கழகம் இணைந்து இந்தியர்களுக்குப்
பிரத்தியேகமாக வேலையிட பாதுகாப்பு
மற்றும் சுகாதார பயிற்சி திட்டத்தை
மிகப்பெரிய அளவில் ஏற்பாடு
செய்திருப்பதாக அவர் சொன்னார்.
.
இத்திட்டத்தின் கீழ் வேலையிட பாதுகாப்பு
மற்றும் சுகாதார அதிகாரி, பயிற்றுனருக்கான பயிற்சி,
வேலையிட பாதுகாப்பு, மற்றும்
சுகாதார ஒருங்கிணைப்பாளர் மற்றும்
பொக்லிப்டு ஓட்டுநருக்கான
பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சி 9 நாள் முதல் 30 நாட்கள்
மட்டுமே.இம்முறை 790 மாணவர்கள்
பயில்வதற்கு 36 லட்சம் வெள்ளி
ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் பங்கேற்கும்
பயிற்சியாளர்களுக்கு தங்கும்
இடம், உணவு மற்றும் பயிற்சி கொடுப்பனவு
இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இந்திய இளைஞர்கள் மத்தியில் தொழில்
திறன் கல்வியை பயில வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கிறது என்பதற்கு
இந்த எண்ணிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று அவர் சொன்னார்.








