NATIONAL

மலேசியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது - பிரதமர்

19 செப்டெம்பர் 2023, 4:20 AM
மலேசியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனாவில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது - பிரதமர்

கோலாலம்பூர், செப் 19 : மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றத்தை உள்ளடக்கிய மலேசியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த பெய்ஜிங், சீனாவில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் ஒப்புக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நேற்று புத்ராஜெயாவில் உள்ள நிதியமைச்சகத்தில் பிரதமரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்த சிங்குவா பல்கலைக்கழகத் தலைவர் வாங் சிகினுடன் அன்வார் நடத்திய சந்திப்பில் மேற்கண்ட விஷயம் மையக்கருவாக இருந்தது.

அடுத்த ஆண்டு மலேசியா-சீனா இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு நிகழ்ச்சியை நடத்தவும் சிங்குவா பல்கலைக்கழகத் திட்டமிட்டுள்ளது.

"சிங்குவா பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமான மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் துறைகளில் ஒன்றாக அறியப்படுவதால், இந்த ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை, குறிப்பாகப் பொறியியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஆகும்," என்று அவர் இன்று முகநூலில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது, மொத்தம் 350 மலேசிய மாணவர்கள் சிங்குவா பல்கலைக்கழகத்தில் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர் என பிரதமர் தெரிவித்தார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.