புத்ராஜெயா, செப் 19: புதிய தேசியக் கணக்காளராகத் துணைத் தலைமைக் கணக்காளர் ஜெனரல் (கார்ப்பரேட்) நோர் யாத்தி அஹ்மட் நேற்று முதல் நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 2-ம் தேதியுடன் சேவை ஒப்பந்தம் முடிவடைந்த டத்தோ டாக்டர் யாக்கோப் முஸ்தபாவுக்குப் பதிலாக நோர் யாத்தியின் நியமனம் நேற்று கணக்காளர் ஜெனரல் துறையால் அறிக்கை ஒன்றில் அறிவிக்கப்பட்டது.
" தேசிய கணக்காளர் என்ற முறையில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு நோர் யாத்தி மீது அரசாங்கம் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத் தேசிய கணக்காளர் துறை தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கணக்காளராக நோர் யாத்தியின் நியமனக் கடிதம் பொதுச் சேவை துறை தலைவர் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமட் அவர்களால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் முதுகலைப் பட்டம் பெற்ற நோர் யாத்தி, 1995 ஆம் ஆண்டு தேசிய கணக்காளரின் கோலாலம்பூர் கிளையில் கணக்காளராகப் பொதுத்துறையில் பணிப்புரிய தொடங்கினார்.
துணைக் கணக்காளர் ஜெனரலாக (கார்ப்பரேட்) நியமிக்கப்படுவதற்கு முன்பு, நோர் யாத்தி 2011 முதல் அக்ரூவல் கணக்காளர் அமலாக்கக் குழுவில் (பிபிபிஏ) பணியாற்றினார் மற்றும் 2018 இல் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
– பெர்னாமா








