ஜொகூர் பாரு, செப் 19 : இந்த ஆண்டின் தொடக்கத்தில் RM17,000 க்கும் அதிகமாக லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக பள்ளி முதல்வர் மற்றும் பள்ளியின் தலைமை நிர்வாக உதவியாளரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சந்தேகத்தின் பேரில் கைது செய்தது.
இச்சம்பவம் தொடர்பில் 53 வயது ஆணும் 50 வயது பெண்ணும் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் குளுவாங் எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளிக்க வந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதம், பள்ளி விடுதியில் வேலி பராமரிப்பு பணிகளை ஒப்பந்ததாரருக்குச் சொந்தமான நிறுவனத்திற்கு வழங்குவதற்காகச் சந்தேக நபர்கள் லஞ்சம் கேட்டு பெற்றது தெரியவந்துள்ளது``.
இதற்கிடையில், சந்தேக நபர்களைக் கைது செய்யப்பட்டதை உறுதி செய்து, எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 17 (ஏ) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாக ஜொகூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ ஆஸ்மி அலியாஸ் றினார்.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் எம்ஏசிசி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- பெர்னாமா


