NATIONAL

2,959 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் பதிவு - பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம்

18 செப்டெம்பர் 2023, 9:15 AM
2,959 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் பதிவு - பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம்

கோலாலம்பூர், செப் 18 – இவ்வாண்டு ஜனவரி முதல் மே வரை சமூக நலத் துறை (JKM) மூலம், உடல், பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான மொத்தம் 2,959 குழந்தை துஷ்பிரயோக வழக்குகளைப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (KPWKM) கையாண்டுள்ளது.

அதில் சிலாங்கூரில் மொத்தம் 647 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து சபாவில் 333 வழக்குகள் மற்றும் கோலாலம்பூரில் 326 வழக்குகள் பதிவாகியுள்ளன என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் 140 குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் (PPKK), 133 குழந்தைகள் நலக் குழுக்கள் (PKKK) மற்றும் 142 குழந்தைகள் செயல்பாட்டு மையங்கள் (PAKK) ஆகியவற்றை அமைச்சின் ‘கண்கள் மற்றும் காதுகளாக’ நிறுவியுள்ளது. அத்துடன் உள்ளூர் சமூகங்களுக்கான ஆலோசனைத் திட்டத்தையும் உருவாக்கியுள்ளது.

"ஊரக மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் (KKDW), கல்வி அமைச்சகம் (MOE) மற்றும் ராயல் மலேசியா காவல்துறை (PDRM) ஆகியவற்றுடன் மூலோபாய ஒத்துழைப்பும், அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைக்கப்பட்டு, சமூகம் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வாதிடும் திட்டத்தைத் தொடர்கிறது,” என்று தெரிவிக்கப்பட்டது.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க, சமூகத்திற்கு 'ஒரே தொடர்பு புள்ளியாக' அமைச்சகத்தின் ஹாட்லைன் (தாலியன் காசிஹ்) அமைத்துள்ளது.

"எந்தவிதமான குழந்தை புறக்கணிப்பு மற்றும் துஷ்பிரயோகம் குறித்து ``தாலியன் காசிஹ்`` 15999 அல்லது 019-2615999 புலனம் மூலம் தொடர்பு கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல், அருகிலுள்ள ஏதேனும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி அவர்களால் கனக்-கனாக் என்ற சட்டத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் நாட்டில் உள்ள குழந்தைகளின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கவனிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

"இந்த திட்டம் உள்ளூர் சமூகம், குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் உள்ளூர் சமூகம் ஆகியவை குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உதவுவதில் பங்கு வகிக்கும் ஒரு தளமாகும்" என்று அமைச்சகம் கூறியது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.