NATIONAL

அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிப்பு மீதான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிரதமர் பதிலளிப்பாரா?

18 செப்டெம்பர் 2023, 8:30 AM
அகமட் ஜாஹிட் ஹமிடி விடுவிப்பு மீதான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிரதமர் பதிலளிப்பாரா?

கோலாலம்பூர், செப் 18 - துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியை  விடுவிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான கேள்விகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை டேவான் ராக்யாட்டில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர் மதியம் 2.30 மணிக்குப் பதில் அளிப்பார் என்று பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள்) டத்தோஸ்ரீ அஸலினா ஓத்மான் கூறினார்.

“பிரதமர் பதிலளிப்பாரா என்று கோத்தா பாரு (எம்பி டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன்) கேள்வி எழுப்பினார். நாளை நீங்கள் வருகை புரிந்தால், மதியம் 2.30 மணி தொடங்கி 3 மணிக்குள் பதிலளிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

டேவான் ராக்யாட்டில் யாயாசன் அகல்புடி சம்பந்தப்பட்ட 47 குற்றச்சாட்டுகள் தொடர்பாக அகமட் ஜாஹிட் மீதான DNAA க்குப் பிரதமர் பதிலளிப்பாரா என்ற தகியுடினின் கேள்விக்கு அஸலினா மேற்கண்டவாறு கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.