சுங்கை பட்டாணி, செப் 18- எட்டு இரட்டை மாடி கடை வீடுகளில் ஏற்பட்ட
தீவிபத்தில் இருவர் பரிதாபமாக கருகி மாண்டனர். இந்தக் கோரச் சம்பவம்
கோத்தா மூடா, ஜாலான் சுங்கை இமாசில் நேற்று பின்னிரவு நிகழ்ந்தது.
இந்த தீவிபத்து தொடர்பில் 1.20 மணியளவில் தமது துறைக்கு தகவல்
கிடைத்ததாக கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின்
இயக்குநர் தீயணைப்பு உதவி ஆணையர் அவாங் ஹிட்சில் பூஜாங்
கூறினார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து திக்காம் பத்து மற்றும் கோல மூடா
தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்ததாக அவர் சொன்னார்.
இந்த தீச்சம்பவத்தில் மூவர் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
எனினும், இதுவரை இருவரின் உடல்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்ட
வேளையில் மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து
மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்
மேலும் குறிப்பிட்டார்.


