NATIONAL

சாலை விபத்தில் மூவர் பலி - லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

17 செப்டெம்பர் 2023, 7:10 AM
சாலை விபத்தில் மூவர் பலி - லாரி ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

சுகாய், செப் 17: ஜாலான் செனெஹ்-மக் லகாம் சந்திப்பிற்கு அருகில் உள்ள கிலோமீட்டர் 154, ஜாலான் ஜெரங்காவ்-ஜபோர் எனும் இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூவர் பலியாகினர். அதன் தொடர்பாக லாரி ஓட்டுநர் ஒருவர் நேற்று முதல் நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் அவரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவைப் நீதிபதி வான் சுஹைலா முகமட் பிறப்பித்தார்

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நிகந்த இவ்விபத்தில் உயிரிழந்த அம்மீர் உசேன் முகமட் (38), அவரது இரு மகன்களான அம்சார் ஹுசைர் அல் ஹுசைன் (4) மற்றும் அம்சார் ஹுசைன் அல் ஹுசைன் (1) ஆகியோர் பயணித்த வாகனத்தை இடது புறத்திலிருந்து வந்த மணல் லாரி மோதியது.

மேலும் இரு குடும்ப உறுப்பினர்கள், அதாவது அமீர் ஹுசைனின் மனைவி, நோர்ஹாபிசா சஸ்வா ஹருன் (38) மற்றும் அவர்களது வளர்ப்பு மகன், அம்சார் ஹுஸ்னியா அமீர் ஹுசைன் அப்துல் அசிம் (8) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காகச் சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.