புதுடில்லி, செப் 16 - உள்நாட்டு விநியோகிப்பாளர் களிடமிருந்து 45,000 கோடி ரூபாய் (540 கோடி அமெரிக்க டாலர்) மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள உயர்மட்டக் குழு அனுமதி அளித்துள்ளது.
12 சுக்கோய் எஸ்.யு.-30 எம்கேஐ போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான வானிலிருந்து பூமிக்கு பாயக்கூடிய துருவஸ்த்ரா ஏவுகணைகள் வாங்குவது ஆகியவை பாதுகாப்பு கொள்முதல் மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகளில் அடங்கும்.
ரஷ்யாவின் யுனைடெட் ஏர்கிராப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமம் பெற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் சுகாகோய் விமானங்களைத் தயாரிக்கிறது.
கவச வாகனங்கள், கடற்படைக்கான ஆய்வுக் கப்பல்கள், ராடார்கள் மற்றும் பீரங்கி இழுவை வாகனங்கள் உட்பட பல இராணுவ தளவாடங்களை பெறுவதற்கான பூர்வாங்க அனுமதியையும் அது வழங்கியது


