ஷா ஆலம், செப் 15: சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி
வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங்
மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்
துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
இதே வானிலை கெடா, பேராக், கிளந்தான், திராங்கானு, பகாங், கோலாலம்பூர், நெகிரி
செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என்று
கணிக்கப்பட்டுள்ளது.
மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது
எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.
சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.








