மலாக்கா, செப் 15 - 36 வது தொற்றுநோயியல் வாரத்தில் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட 62,355 வளாகங்களில் மொத்தம் 7,257 வளாகங்கள் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி செய்வதற்குச் சாதகமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
அக்காலக்கட்டத்தில், உரிமையாளர்கள் அல்லது வளாகத்தில் வசிப்பவர்களுக்கு கொசு இனப்பெருக்கம் செய்யும் கொள்கலன்களை ஏழு நாட்களுக்குள் அகற்றுவதற்காக மொத்தம் 8 அறிவிப்புகள் வழங்கப்பட்டதாக என மாநில சுகாதாரம், மனித வளங்கள் மற்றும் ஒற்றுமை குழுவின் தலைவர் இங்வே ஹீ செம் கூறினார்.
"RM 244,000 மதிப்புள்ள மொத்தம் 488 அபராதங்கள் மாநில சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டன. அதில் இதுவரை செலுத்தப்பட்ட மொத்த அபராதத் தொகை RM74,510 ஆகும்.
"இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளின் போது RM27,300 மதிப்புள்ள அறுபத்தொன்பது அபராதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
செப்டம்பர் 3 முதல் 9 வரை மாநிலத்தில் டிங்கி தொடர்பாக 21 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது ஆறு சம்பவங்கள் குறைவாகும்.
செப்டம்பர் 9 ஆம் தேதி வரை மலாக்காவில் மொத்தம் 791 டிங்கி சம்வங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
- பெர்னாமா








