NATIONAL

பொதுச் சேவைகளை வலுப்படுத்தும் புத்ராஜெயாவின் விருப்பத்தை சிலாங்கூர் அரசாங்கம் வரவேற்கிறது

15 செப்டெம்பர் 2023, 7:26 AM
பொதுச் சேவைகளை வலுப்படுத்தும் புத்ராஜெயாவின் விருப்பத்தை சிலாங்கூர் அரசாங்கம் வரவேற்கிறது

ஷா ஆலம், செப் 15: 12 வது மலேசியத் திட்டத்தில் (RMK12) மாநிலத்தில் பொதுச் சேவைகளை வலுப்படுத்தும் புத்ராஜெயாவின் விருப்பத்தை சிலாங்கூர் அரசாங்கம் வரவேற்கிறது.

பேருந்து போக்குவரத்து (BRT), சுபாங் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் (LTSAAS) மற்றும் கேரி தீவு மூன்றாவது துறைமுகத்தின் மறுவடிவமைப்பு ஆகியவை மேம்பாடுகளில் அடங்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கப்பட்ட முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மாநிலத்தின் திட்டங்களுடன் ஒத்துப்போகிறது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"பொது சேவைகளின் மேம்பாடு மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று மாநில அரசு நம்புகிறது. இது மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

முன்னதாக, சிலாங்கூரில் முதலீடுகளை ஈர்க்க LTSAAS இன் மறுவடிவமைப்பு முக்கியமானது குறிப்பாக விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளுக்கு ஆகும் என முதலீடு துறையின் பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இங் சீ ஹான் கூறினார்.

செப்டம்பர் 11 அன்று, அரசியல்  நிலைத்தன்மை  செழிப்பான மற்றும் உயர் வருமானத்திற்கு  என்ற கருப்பொருளில், டேவான் ராக்யாட்டில் RMK12 அரையாண்டு மதிப்பாய்வுக்கான திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்வைத்தார்.

நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், வளமான சமுதாயத்தை உருவாக்குதல் மற்றும் அதிக வருமானத்தை  நோக்கி  நாட்டை  நகர்தல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை இந்த திட்டம் உள்ளடக்கியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.