NATIONAL

சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை - MyEG

15 செப்டெம்பர் 2023, 4:28 AM
சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை - MyEG

கோலாலம்பூர், செப் 15: செப்டம்பர் 12 ஆம் தேதி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் எட்ஜ் மலேசியாவின் இணைய போர்ட்டலில், MyEG மலேசியாவின் குடிவரவுத் துறையால் இடைநிறுத்தப்பட்ட போதிலும், அதன் வெளிநாட்டு பணியாளர்களின் அனுமதி புதுப்பித்தல் சேவைகளுக்காகச் சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்ட செய்திக் கட்டுரைகள் தொடர்பாக இ-அரசு சேவை வழங்குநர் புர்சா மலேசியாவிற்கு இன்று தாக்கல் செய்ததில் விளக்கமளித்துள்ளார்.

அதாவது, சேவைகள் தோல்வியுற்றால், வாடிக்கையாளர்களின் கோரிக்கையின் பேரில் வசூலிக்கப்பட்ட எந்தத் தொகையும் திரும்ப வழங்கப்படும் என்பது நிறுவனத்தின் கொள்கை என்று MyEG  தெரிவித்தது.

இதற்கிடையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் குடிவரவு துறையுடனான MyEG இன் சேவை ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இணையதளங்களில் உள்ள கட்டுரைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

"ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் MyEG இன் சேவை இடைநிறுத்தப்படவில்லை என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்," என்று அது மேலும் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.