NATIONAL

அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகளுக்கு அமைச்சின் வாயிலாகப் பராமரிப்பு உதவி

15 செப்டெம்பர் 2023, 3:47 AM
அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகளுக்கு அமைச்சின் வாயிலாகப் பராமரிப்பு உதவி

புத்ராஜெயா, செப்.15- நாடு முழுவதும் உள்ள

அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகளுக்குக்

கல்வி அமைச்சு இவ்வாண்டில் பராமரிப்பு

உதவி வழங்கியுள்ளது.

2021ஆம் ஆண்டு அரசு உதவி பெறும்

பள்ளிகளுக்கான உதவி மேலாண்மை

வழிகாட்டி மற்றும் 2023ஆம் ஆண்டு அரசு

உதவி பெறும் பள்ளிகளுக்கான மேலாண்மை

உதவி செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த

பராமரிப்பு உதவி வழங்கப்படுவதாகக் கல்வி

அமைச்சு தெரிவித்தது.

தேசிய பள்ளிகள், சீன தேசிய வகை பள்ளிகள்

மற்றும் தமிழ் தேசிய வகை பள்ளிகள் உட்பட

அனைத்து வகையான பள்ளிகளிலும்

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 90

கோடி வெள்ளி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட

2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு

ஏற்ப இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

அரசு கல்வி நிறுவனங்களில் பராமரிப்பு,

கழிவறைகளை மேம்படுத்துதல் மற்றும் சிறப்பு

ஒதுக்கீடு குறித்து சில தரப்பினர் எழுப்பிய

விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில்

அமைச்சு இந்த அறிக்கையை

வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு இந்த சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அரசு உதவி

பெறும் பள்ளிகளின் நலனைக் கல்வி அமைச்சு புறக்கணிக்கவில்லை என்று அந்த

அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.