இஸ்கந்தார் புத்ரி, செப் 14 - இன்று கோத்தா இஸ்கந்தாரில் உள்ள சுல்தான் இஸ்மாயில் கட்டிடத்தில் நடைபெற்ற 15 வது ஜொகூர் மாநில சட்டமன்றத்தின் இரண்டாவது அமர்வின் மூன்றாவது கூட்டத்தில் அமானாவின் சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் பதவிப் பிரமாணம் எடுத்தார்.
பதவியேற்பு விழா ஜொகூர் சபாநாயகர் டத்தோ முகமட் புவாட் சர்காஷிக்கு முன்னிலையில் நடைபெற்றது மற்றும் அந்நிகழ்வை மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி மற்றும் பிற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்த்தனர்.
ஜூலை 23 அன்று காலமான டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப்பின் குடும்பத்திற்கு ரெங்கிட் சட்டமன்ற உறுப்பினருமான புவாட் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த பூலாய் நாடாளுமன்ற மற்றும் சிம்பாங் ஜெராம் மாநில இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜொகூர் முன்னாள் சபாநாயகர் சுஹைசன் கையாட் மற்றும் நஸ்ரி ஆகியோருக்கும் புவாட் தனது வாழ்த்தையும் தெரிவித்தார்.
56 வயதான நஸ்ரி, சிம்பாங் ஜெராம் மாநிலத் தொகுதியில் 3,514 வாக்குகள் பெரும்பான்மையுடன் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த டாக்டர் முகமட் மஸ்ரி யாஹ்யா மற்றும் சுயேட்சை வேட்பாளர் எஸ். ஜெகநாதனை தோற்கடித்தார்.
அமானா துணைத் தலைவராக இருந்த சலாவுதீன் மறைவைத் தொடர்ந்து இரண்டு தேர்தல்களும் நடத்தப்பட்டன.
- பெர்னாமா


