புத்ராஜெயா, செப் 14 - குடும்ப வருமானத்தை அதிகரிப்பதில் அரசு உடனடி கவனம்
செலுத்தினால் வறுமையை ஒழிக்க முடியும் என பொருளாதார அமைச்சர் ரஃபிஸி
கூறினார்.
மேலும், நிலையான வருமானம் ஈட்டும் திட்டங்களை உருவாக்கும் முயற்சியில்
அரசாங்கம் உள்கட்டமைப்பில் முதலீடு செய்து வருகிறது என்றார்.
உள்கட்டமைப்புகள் வெறும் இயந்திரங்கள் மட்டுமல்ல மாறாகப் பங்கேற்பாளர்களுக்கு
அல்லது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம்
ஈட்டும் சொத்துக்கள் என்றார்.
குடும்பங்களின் வருமான அளவை அதிகரிப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன், வறுமைக்
குறியீடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட சில காரணிகள் மேம்படும்,
எடுத்துக்காட்டாக, இணையம் மற்றும் ஆரோக்கியத்திற்கான அணுகல் முறை ஆகும்
என்றார்.
வருமான அளவு அதிகரிக்கும் போது, வாழ்க்கைத் தரமும் அதிகரிக்கிறது. அதனால்,
வருமான அளவை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதன்வழி, மக்கள்
சிறந்த வருமானத்துடன், அவர்களின் வாழ்க்கைச் செலவைச் சிறப்பாக நிர்வகிக்க
முடியும், ”என்று ரஃபிஸி கூறினார்.
- பெர்னாமா








