NATIONAL

பருவமழை மாற்றம் இந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நவம்பர் வரை தொடரும்

14 செப்டெம்பர் 2023, 7:39 AM
பருவமழை மாற்றம் இந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நவம்பர் வரை தொடரும்

கோலாலம்பூர், செப் 14: பருவமழை மாற்றம் இந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நவம்பர் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் தொடக்கமானது மே 15 முதல் தொடங்கும் தென்மேற்கு பருவமழை காலத்தை குறிக்கிறது என மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் (மெட்மலேசியா) இயக்குநர் ஜெனரல் ஹெல்மி அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பருவமழை மாற்றத்தின் போது நாட்டின் பிராந்தியம் பல்வேறு திசைகளில் இருந்து பலவீனமான காற்றைப் பெறும். இந்நிலை இடியுடன் கூடிய மழைக்கு உகந்தது. அதுமட்டுமில்லாமல், பொதுவாக குறுகிய காலத்தில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றைக் கொண்டு வரும்.

"இந்த வானிலை முக்கியமாக மாலை மற்றும் அதிகாலையில் மேற்கு கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் உட்பகுதி, மேற்கு சபா மற்றும் மத்திய சரவாக் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் நிகழும்.

இந்த வானிலை திடீர் வெள்ளம் மற்றும் வலுவாக இல்லாத கட்டமைப்புகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. " என்று அறிக்கை கூறுகிறது.

இக்காலகட்டத்தில் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளம், myCuaca மற்றும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் மெட்மலேசியா தெரிவிக்கும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் ஏதேனும் கேள்விகளுக்கு மெட்மலேசியா ஹாட்லைன் 1-300-22-1638க்கு அழைக்கலாம்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.