NATIONAL

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை அடுத்தாண்டு மறுசீரமைப்பு செய்யப்படும்

14 செப்டெம்பர் 2023, 6:16 AM
இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை அடுத்தாண்டு மறுசீரமைப்பு செய்யப்படும்

கோலாலம்பூர், செப் 14- இளைஞர் நாடாளுமன்றத்திற்கான வாக்களிப்பு

நடைமுறை அடுத்தாண்டில் மிகப்பெரிய அளவில் மறுசீரமைப்பு

செய்யப்படவுள்ளதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல்

கூறினார்.

இந்த இளைஞர் நாடாளுமன்றத் திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை

நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்க இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை

அமைச்சு இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை

மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

திறன்வாய்ந்த இளம் தலைவர்களை உருவாக்குவதற்குரிய கருவளத்

திட்டமாக இந்த இளைஞர் நாடாளுமன்றம் விளங்கும் என்று அவர்

சொன்னர்.

இளைஞர் நாடாளுமன்றத்தில் பங்கேற்கக்கூடிய ஆற்றல், திறன்,

நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் கல்வி கற்ற இளைஞர்களை நாங்கள் தேடி

வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இளைஞர்களுக்கான தொடக்கப் படியாக இந்த இளைஞர் நாடாளுமன்றம்

விளங்கும் என நாங்கள் நம்புகிறோம். இறைவன் அருள் கிட்டினால்

அவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக்கூட ஆகலாம்

என்றார் அவர்.

இன்று இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்களுடன்

இணைந்து தேசிய தின மற்றும் மலேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில்

கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்

தெரிவித்தார்.

இம்மாதம் 16ஆம் தேதி மலேசிய தினத்தை நாம் கொண்டாடவுள்ள

நிலையில் தனித்துவத்தை ஒதுக்கி விட்டு தேசிய உணர்வுகளை

விதைப்பதன் மூலம் மலேசியாவை ஆற்றல்மிக்க நாடாக

உருவாக்குவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட

வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.