NATIONAL

பிரதமரின் மற்றுமொரு சீனப் பயணம் இரண்டாம் சுற்று முதலீட்டு வாய்ப்புக்கு வழி வகுக்கும்- ரபிஸி நம்பிக்கை

14 செப்டெம்பர் 2023, 4:06 AM
பிரதமரின் மற்றுமொரு சீனப் பயணம் இரண்டாம் சுற்று முதலீட்டு வாய்ப்புக்கு வழி வகுக்கும்- ரபிஸி நம்பிக்கை

புத்ராஜெயா, செப் 14- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

மேற்கொள்ளவிருக்கும் இரண்டாவது சீனப் பயணம் கடந்த மார்ச் மாத

பயணத்தின் போது அடையப்பட்டதைப் போல் மற்றொரு சுற்று முதலீட்டு

வாய்ப்புக்கு வழி வகுக்கும் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி

கூறினார்.

ஒவ்வொரு முறையும் பிரதமர் மேற்கொள்ளும் சீனப் பயணம் வெறுமனே

புன்னகைப்பதையும் நலம் விசாரிப்பதையும் நோக்கமாகக் கொண்டதல்ல.

மாறாக, முதல் பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு

ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் மேம்பாடுகள் மற்றும் அடுத்தக்

கட்ட நகர்வுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர்

சொன்னார்.

இந்த பயணம் மேலும் ஒரு சுற்று முதலீட்டு வாய்ப்புக்கு வழி வகுக்கும்

என நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று இங்கு மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழில்துறை

சம்மேளனத்தின் நிகழ்வு மற்றும் 17வது சீன தொழில்முனைவோர்

மாநாட்டில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்

இதனைக் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சீனாவின் நன்னிங் நகரில்

நடைபெறவிருக்கும் 2023 சீன-ஆசியான் கண்காட்சியில் கலந்து

கொள்வதற்காக பிரதமர் அன்வார் அந்நாட்டிற்கு வருகை புரியவிருக்கிறார்.

பிரதமர் அன்வாருக்கும் சீனத் தலைவர்களுக்கும் இடையே அணுக்கமான

நட்புறவு நிலவுவதாக கூறிய ரபிஸி, சந்திப்புகள் மற்றும்

கலந்துரையாடல்களை அவ்விரு தரப்பினரும் தொடர்ச்சியாக நடத்தி

வருவதாகக் குறிப்பிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.