NATIONAL

சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் கணவன்-மனைவி கைது

13 செப்டெம்பர் 2023, 9:05 AM
சிறுவனைத் துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் கணவன்-மனைவி கைது

ஷா ஆலம், செப் 13: ஆறு வயது சிறுவனை உடலில் காயம் ஏற்படும் வரை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படும் கணவன்-மனைவியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் பாதிக்கப்பட்ட குழந்தை வீட்டை விட்டு ஓடிப்போகும் வரை துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக ஜெம்போல் மாவட்ட காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பொதுமக்களிடம் இந்த சம்பவம் குறித்து தகவல் பெற்ற காவல்துறையினர், “பாதிக்கப்பட்டவரின் உடல் முழுவதும் பல தழும்புகள் மற்றும் காயங்கள் இருந்ததை பரிசோதனை செய்ததில் கண்டறியப்பட்டது,`` என்று கண்காணிப்பாளர் ஹூ சாங் ஹூக் கூறினார்

பாதிக்கப்பட்ட நான்கு உடன் பிறப்புகளில் மூத்தப்பிள்ளையான அச்சிறுவன், மேல் சிகிச்சைக்காகத் துவான்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதை உறுதிப் படுத்தியதாகவும் சாங் ஹூக் கூறினார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31 (1) (a) இன் கீழ் இரண்டு சந்தேக நபர்களும் ஏழு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.