கோலாலம்பூர், செப் 13-
ஒட்டுக் கேட்டது மற்றும் உளவு பார்த்த
காரணத்திற்காக மலேசியாவைச் சேர்ந்த
மாணவர் நோர்வே நாட்டின் ஓஸ்லோ நகரில்
கைது செய்யப்பட்டுள்ளதை அந்நாட்டிலுள்ள
மலேசியத் தூதரகத்தின் வாயிலாக
வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான அடுத்தக் கட்ட
நகர்வுகளை அமைச்சு அணுக்கமாகக்
கண்காணித்து வருவதாகவும்
தேவைப்பட்டால் அவருக்கு உரிய
ஆலோசகச் சேவைகள் வழங்கப்படும் என்றும்
அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
கைது செய்யப்பட்ட அம்மாணவர் பிரதமர்
அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும்
ஒஸ்லோவில் உள்ள பிற அரசாங்க
அலுவலகங்களை உளவு பார்க்க முயன்றதாக
நார்வேய் உளவுத்துறை நிறுவனம் கூறியதாக
நார்வே ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட
அம்மாணவர், நாட்டிற்கு எதிராக உளவு
நடவடிக்கைகளை மேற்கொண்டதைத்
தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில்
குற்றஞ்சாட்டப்பட்டார்.
அம்மாணவர் குறித்து எந்தத் தகவலும்
இதுவரை வெளியிடப்படவில்லை.
விசாரணையின் போது அம்மாணவர்
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை
மறுத்துள்ளார்.
அதே சமயம் நார்வே அதிகாரிகள்
அம்மாணவர்கள் எந்த நாட்டிற்காக உளவு
பார்த்தார் என்பது குறித்து
வெளியிடவில்லை.
இந்த விவகாரம் குறித்த முழுமையான விபரம்
தமக்குத் தெரியாது என்றும் விசாரணை
இன்னும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும்
அரசு தரப்பு வழக்கறிஞர், பெஃட்ரிக் புலோம்
கூறினார்.
தற்போது நார்வே உளவுத்துறை நிறுவனம்
விசாரணை நடத்தி வருகின்றது. மின்னியல்
சாதனம் உட்பட சாதனம் உட்பட பல
பொருட்களையும் காவல்துறை
அம்மாணவரிடமிருந்து பறிமுதல் செய்தனர்.
அம்மாணவர் நார்வேயில் கல்வி கற்கவில்லை
என்றும் குறுகிய காலத்திற்கு இங்கு
வசிப்பதும் கண்டறியப்பட்டது.
நார்வே பிரதமர் அலுவலகம் மற்றும்
பாதுகாப்பு அமைச்சுக்கு அருகில் வாடகைக்
காரில் சட்டவிரோத சிக்னல் கண்காணிப்பில்
ஈடுபட்டிருந்த போது சந்தேக நபர் கைது
செய்யப்பட்டதாக நார்வே உளவுத்துறை
தெரிவித்தது.








