சிங்கப்பூர், செப் 13 - பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் இன்று புதன்கிழமை
சிங்கப்பூருக்குச் செல்லவுள்ளதாக குடியரசின்
வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் அன்வார் மற்றும் அவரது மனைவி
டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான்
இஸ்மாயிலுக்கு சிங்கை பிரதமர் லீ சியென்
லூங் மற்றும் அவரின் துணைவியார் தேநீர்
விருந்து வழங்குவார்கள் என்று அமைச்சு
வெளியிட்ட ஒரு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
மில்கன் ஆசியா கழகத்தின் 2023 உச்சநிலை
மாநாட்டில் உரையாற்றுவதற்காக
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வர்
சிங்கப்பூர் வந்துள்ளார்.
அவருடன் முதலீடு, வர்த்தகம் மற்றும்
தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ
ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் மற்றும்
வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ
ஜம்ரி அப்துல் காடீர் ஆகியோரும் வருகை
புரிர்துள்ளனர்.


