ஈப்போ, செப் 12 - பேராக் கிரியன் மாவட்டத்தில் தனியார் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர், தொலைபேசி மோசடியில் சிக்கி RM485,000 இருந்ததாகக் கூறினார்.
அதன் தொடர்பாக 72 வயதான பெண் ஒருவர் நேற்று காலை 11.40 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்தார் என பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி கூறினார்.
“பாதிக்கப்பட்டவரை ஆகஸ்ட் 4 ஆம் தேதி கோரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறி ஒருவர் தொடர்பு கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் கிரெடிட் கார்டுகள், அடையாள அட்டை சில்லுகள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் அடங்கிய பேக்கட்டை பெறுநருக்கு அனுப்பியதாகவும், டெலிவரி முயற்சி தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் அக்கூற்றை மறுத்தார், ஆனால் போலீஸ் அதிகாரிகளாக காட்டிக் கொண்ட இரண்டு நபர்கள் பாதிக்கப்பட்டவர் மனித கடத்தல் மற்றும் பண மோசடி வழக்குகளில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டியதாகவும், கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாக அச்சுறுத்திய தாகவும் முகமட் யூஸ்ரி கூறினார்.
பயத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் 8 முதல் செப்டம்பர் 6 வரை சந்தேக நபர் அளித்த 11 வங்கிக் கணக்குகளுக்கு 34 பரிவர்த்தனைகளை செய்துள்ளார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
- பெர்னாமா


