NATIONAL

இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் பிரதமரின் முயற்சிகளை மித்ரா வரவேற்கிறது - டத்தோ ரமணன்

12 செப்டெம்பர் 2023, 7:34 AM
இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் பிரதமரின் முயற்சிகளை மித்ரா வரவேற்கிறது - டத்தோ ரமணன்

கோலாலம்பூர், செப் 11 - இந்தியர்களின்

சமூக பொருளாதார மேம்பாட்டை

வலுப்படுத்துவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட

நடவடிக்கைகளும் முயற்சிகளும்

மேற்கொள்ளப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ

அன்வார் இப்ராஹிம் அறிவித்திருப்பதை

மித்ரா சிறப்புக் குழுவின் தலைவரும்

சுங்கைபூலோ நாடாளுமன்ற

உறுப்பினருமான டத்தோ ரமணன்

வரவேற்றுள்ளார்.

நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் சமூக

பொருளாதார நிலையை

மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும்

இதுவொரு சிறந்த முடிவாக இருப்பதாகவும்

அவர் கூறினார்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு

அறிவிப்பதற்கு முன் இந்த முயற்சி குறித்து

விரைவில் முழுமையான தகவல்களை

பெறுவதற்கான நடவடிக்கையில் மித்ரா

ஈடுபடும்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் சமூக

பொருளாதார மேம்பாடுகள் தொடர்பாக

பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து

விவாதிப்பதற்காக கூடிய விரைவில் பிரதமர்

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன்

சந்திப்பு நடத்தவிருப்பதாகவும் டத்தோ

ரமணன் வெளியிட்ட அறிக்கையில்

தெரிவித்துள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.