NATIONAL

டிவி 3 வின் மூத்த செய்தி தொகுப்பாளர் ரேமண்ட் கோ மரணம்

12 செப்டெம்பர் 2023, 7:27 AM
டிவி 3 வின் மூத்த செய்தி தொகுப்பாளர் ரேமண்ட் கோ மரணம்

கோலாலம்பூர், செப் 12:   சில காலம் நோயுற்ற பின் இன்று மரணமடைந்த டிவி3 வின் மூத்த செய்தி தொகுப்பாளர் ரேமண்ட் கோவின் குடும்பத்தினருக்குத் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

மாரடைப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கோ இன்று காலை தனது இறுதி மூச்சை விட்டதாக அவரின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பிறகு மஸ்ஜிட் அத்-தக்வா, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் தொழுகை நடத்தப் பட்டு, புக்கிட் கியாரா இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள மூத்த செய்தி தொகுப்பாளரான கோ உச்சரிப்புத் துறையில் தனிநபர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.