NATIONAL

மலேசியா- வியட்னாம் உறவை வலுப்படுத்த பிரகாசமான வாய்ப்புகள்

12 செப்டெம்பர் 2023, 5:01 AM
மலேசியா- வியட்னாம் உறவை வலுப்படுத்த பிரகாசமான வாய்ப்புகள்

கோலாலம்பூர், செப் 12 – மலேசியாவும் வியட்னாமும் இவ்வாண்டு அரசதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த  அதிக வாய்ப்பு  உள்ளதாக  வியட்னாமுக்கான மலேசியத் தூதர் டத்தோ டான் யாங் தாய் கூறினார்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன், வலுவான மற்றும் நிலையான இருவழி வர்த்தகத்தை மேம்படுத்துவது மற்றும் பிற துறைகளில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வழிகளை தொடர்ந்து. ஆராய்வது அவசியம் என்று அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

புதிய வாய்ப்புகள் அல்லது சவால்கள் ஏற்படும் போது அதனை ​​நாம் கருத்தில் கொண்டு

மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப மாற்றியமைக்க வேண்டும். விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு, ஹலால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மின்னியல் மற்றும் தயாரிப்பு பொருள்கள் சார்ந்த துறைகளில் வளர்ச்சி காண்பதற்கு இடமுள்ளது என நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.

​​பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் இலக்கவியல் மயமாக்கல் போன்ற துறைகளில்

ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கான ஆற்றல் மற்றும் வாய்ப்புகளை நாம் பரிசீலிக்கலாம் என்று மலேசியா-வியட்நாம் உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவையொட்டி பெர்னாமாவுக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில டத்தோ டான் கூறினார்.

கடந்த 1973 ஆம் ஆண்டில் இருதரப்பு உறவுகள் முதன்முதலில்

தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளுகளின் மக்களுக்கிடையிலான

உறவுகள் சீராக வளர்ந்து வருவதாக அவர் கூறினார்.

வியட்நாம் மற்றும் மலேசியா இடையிலான வாராந்திர விமானப் பயண எண்ணிக்கையை

அதிகரிப்பதே இரு நாடுகளின் மக்களுக்கும் இடையிலான நட்புறவை அதிகரிப்பதற்கான

திறவுகோலாகும், மேலும் இது எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.