ஷா ஆலம், செப் 12: இந்த ஆண்டின் எட்டு மாதங்களில் காவல்துறையினரால் அல்லது அமலாக்கத்துறை மூலம் பல்வேறு குற்றங்களுக்கான மொத்தம் 2.56 மில்லியன் சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமீறல்களை உள்ளடக்கிய அதிக எண்ணிக்கையிலான சம்மன்கள் அதாவது 985,635 சம்மன்கள் வழங்கப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
அவை வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விளக்குகளை மோதுவது, அவசரப் பாதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் இரட்டைக் கோடுகளில் முந்திச் செல்வது உள்ளிட்ட பல குற்றங்கள் ஆகும் என டத்தோஸ்ரீ மாட் காசிம் கரீம் விளக்கினார்.
"விபத்து களுக்குக் காரணமான குற்றங்களுக்கு எதிராக மொத்தம் 154,369 சம்மன்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக, வாகனம் பழுதடையும் போது, விபத்து ஏற்படும் வரை வாகன ஓட்டிகள் முக்கோண அடையாளத்தை வைக்கத் தவறி விடுகிறார்," என்று அவர் கூறினார்.
மேலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்றுதல் உறுதிசெய்ய தனது தரப்பு எப்போதும் அமலாக்கத்தை மேற்கொள்ளும் என்றார்.








