பெய்ஜிங், செப்டம்பர் 12 - சீனப் பயோடெக் நிறுவனம் சினோவெக் பயோடெக், அதன் SA55 ஊசியின் 2 ஆம் கட்ட சோதனையை தொடங்கியுள்ளதாக திங்களன்று கூறியது, இது கோவிட் -19 சிகிச்சையாக அங்கீகரிக்கப்படும் என்று நம்புவதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த 1 ஆம் கட்ட ஆய்வில் சீனாவில் உள்ள 18 முதல் 65 வயதுக்குட்பட்ட 40 ஆரோக்கியமான நபர்களிடத்தில் SA55 ஊசி ஆய்வு செய்யப்பட்டது. அதன் வழி, இது பாதுகாப்பான ஒன்று என உறுதி செய்யப்பட்டது.
மேலும், 2 ஆம் கட்டம் ஆய்வில் SARS-CoV-2 வைரஸின் வீரியத்தை குறைக்கும் திறன் SA55 மதிப்பிடப்படும்.
- பெர்னாமா-டிபா


