பிரெசெல்ஸ், செப் 12- அண்மையில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தில்
பாதிக்கப்பட்ட மெரோக்கோ நாட்டில் நிவாரணப் பணிகளை
மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் 10 லட்சம் யூரோவை (50.1
லட்சம் மலேசிய ரிங்கிட்) வழங்க முன்வந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய
ஆணையரை மேற்கோள் காட்டி ஜெர்மன் நியுஸ் ஏஜென்சி செய்தி
வெளியிட்டுள்ளது.
மொரோக்கோ மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் உறுதுணையாக இருக்கும்
காரணத்தால் அந்நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை ஈடு செய்ய
10 லட்சம் யூரோ தொகுதி உடனடியாக வழங்கப்படுகிறது என்று அந்த
ஆணையத்தின் நெருக்கடி நிலைக்கான ஆணையர் ஜேனேஸ் லெனார்சிக்
அறிக்கை ஒன்றில் கூறினார்.
இந்த இக்கட்டான தருணத்தில் மெரோக்கோ நாட்டிற்கு எல்லா
வகையிலும் உதவ ஐரோப்பிய ஒன்றியம் தயாராக உள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.


