கோலாலம்பூர், செப் 11- டான்ஸ்ரீ டோமி
தோமஸ் எழுதிய My Story: Justice in the
Wilderness (எனது கதை: வனாந்திரத்தில்
நீதி) என்ற புத்தகத்தை விசாரிக்கவிருக்கும்
அரச விசாரணை ஆணையத்தின்
உறுப்பினர்களின் பட்டியலை அரசாங்கம்
சமர்ப்பிக்கும் என்று துணைப் பிரதமர்
டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி
தெரிவித்தார்.
இந்தப் பெயர்ப் பட்டியலை பிரதமர் துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான்
அமைச்சரவையில் தாக்கல் செய்யும் அதே
வேளையில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-
சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-
முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதலையும்
பெறுவார் என்று ஜாஹிட் சொன்னார்.
அரச விசாரணை ஆணையத்தை அமைக்க
அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்
அடிப்படையில் ஒரு பணிக்குழு
உருவாக்கப்பட்டது. ஆனால் டோமி தோமஸ்
பணிக்குழு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை எடுத்தார். எனவே
பணிக்குழுவில் உள்ள விவரங்கள் இதுவரை
நியமிக்கப்படாத புதிய விசாரணை ஆணைய
உறுப்பினர்களுக்கு ஆதரவாக அமையலாம்
என அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணை ஆணையத்தின் பணியை
விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக மாட்சிமை
தங்கிய பேரரசரின் ஒப்புதலைப் பெற சட்டம்
மற்றும் நீதித் சீர்திருத்த அமைச்சர் இந்தப்
பெயர் பட்டியலை அமைச்சரவையில்
சமர்ப்பிப்பார் நான் நம்புகிறேன் என்றார்
அவர்.
நேற்று இங்கு மக்கள் சக்தி கடசியின் 15ஆம்
ஆண்டு பொதுக் கூட்டத்தை தொடக்கி
வைத்தப் பிறகு செய்தியாளர்களிடம்
இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, நாட்டின் நீதித்துறை மற்றும்
சட்டத்தின் உயர்நெறி மற்றும் சுதந்திரம்
தொடர்பான சிக்கல்களை விரிவாக ஆய்வு
செய்வதற்காக விசாரணை ஆணையத்தை
அமைக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக
அசாலினா முன்னதாகக்
கூறியிருந்தார்.








