NATIONAL

ஊடகவியலாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்கப்பட்டது தொடர்பில் புகார் எதுவும் இல்லை- ஆயோப் கான்

10 செப்டெம்பர் 2023, 11:29 AM
ஊடகவியலாளர்களுக்குத் தொந்தரவு கொடுக்கப்பட்டது தொடர்பில் புகார் எதுவும் இல்லை- ஆயோப் கான்

மூவார், செப் 10- இம்மாதம் 5ஆம் தேதி

இடைத்தேர்தல் பிரசாரத்தில் செய்தி

சேகரிக்கும் போது அமைச்சரின்

மெய்க்காப்பாளர்களால் இரண்டு பெண்

நிருபர்கள் உட்பட ஊடகவியலாளர்கள்

தொல்லைக்குள்ளானதாகக் கூறப்படுவது

தொடர்பில் காவல்துறைக்கு எந்தப் புகாரும்

கிடைக்கவில்லை.

இவ்விவகாரம் தொடர்பில் தற்போதைக்கு

​​ஊடகங்களில் மட்டுமே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது

குறித்து காவல் துறையினரிடமிருந்து முழு

அறிக்கையை நான் இன்னும் பெறவில்லை

என்று தேசிய போலீஸ் படைத் துணைத்

தலைவர் டத்தோஸ்ரீ ஆயோப் கான் மைடின்

பிச்சை கூறினார்.

எங்களுக்கு அவகாசம் கொடுங்கள். முழு

விசாரணை மேற்கொள்ளப்படும் வரை

காத்திருங்கள் என்று அவர் நேற்று பெய் சாய்

சீனப்பள்ளியில் வாக்களிப்பைப்

பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம்

கூறினார்.

பூலாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு கடந்த 5ஆம் தேதி தாமான்

அங்கிரிக் மற்றும் தாமான் டாலியா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரங்களின்

போது இச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. செய்தியாளர் கூட்டத்தைத் தனது கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்த

பெண் நிருபர் ஒருவரின் கையைத் தொட்டது உட்பட ஊடகவியலாளர்களைக் கடமையைச் மேற்கொள்ளவிடாமல் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்கள் பலர் தடுக்க

முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.