NATIONAL

2.1 கிலோ போதைப்பொருளுடன் ஆடவர் கைது

8 செப்டெம்பர் 2023, 10:01 AM
2.1 கிலோ போதைப்பொருளுடன் ஆடவர் கைது

ஷா ஆலம், செப் 8: கடந்த புதன்கிழமை ஜாலான் தீமூர், தவாவில் 2.1 கிலோ

போதைப்பொருளுடன் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டர். அந்நபருக்கு நாளை

திருமணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரிடம் (30) ரிங்கிட் 120,000 மதிப்புள்ள போதைப்பொருள்

கைப்பற்றப்பட்டதாகத் தவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் கூறினார். அந்நபர்

காவல்துறையினரைக் கண்டதும் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனம் ஓட்டிச்

சென்றதாகப் பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

சந்தேக நபர் தனது காரில் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் காவல்துரையினரால்

வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார் என உதவி ஆணையர் ஜாஸ்மின் ஹுசின்

கூறினார்.

முதற்கட்ட பரிசோதனையில் சந்தேக நபரிடம் சியாபு வகை என சந்தேகிக்கப்படும்

போதைப்பொருள் அடங்கிய பிளாஸ்டிக் பேக்கட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், பரிசோதனையில் ``குவான்யின்வாங்`` என்று எழுதப்பட்ட இரண்டு பச்சை நிற பிளாஸ்டிக் பேக்கட்டுகள் அடங்கிய பெட்டியும் கைப்பற்றப்பட்டது, `` என்று அவர்

கூறினார்.

விசாரணையின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் ஆபத்தான போதைப்பொருள்

சட்டம் (ADB) 1952 இன் பிரிவு 39B இன் கீழ் குற்றப் பின்னணி கொண்ட சந்தேக நபர்

கைது செய்யப்பட்டதாக ஜாஸ்மின் கூறினார்.

ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் சந்தேக நபர்

செப்டம்பர் 7 முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.