NATIONAL

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை G20க்கு அதிக உலகளாவிய ஒத்துழைப்பை கோருகின்றன

8 செப்டெம்பர் 2023, 8:59 AM
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை G20க்கு அதிக உலகளாவிய ஒத்துழைப்பை கோருகின்றன

வாஷிங்டன், செப் 8- இந்த வார இறுதியில் நடைபெற உள்ள ஜி 20 உச்சி மாநாட்டிற்கு பருவநிலை மாற்றம், தேசிய கடன் மற்றும் டிஜிட்டல் புரட்சி தொடர்பாக உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சிறந்த உலகளாவிய ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக டிபிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாடு மூலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்பை அதிகரித்து உலகின் முன்னணி மற்றும் வளர்ந்து வரும் 20 பொருளாதாரக் குழுவின் கூட்டம் அனைத்து பகுதிகளிலும் கூட்டாண்மைகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

"சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி இரண்டும் அவைகளின் விரிவான நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய உறுப்பினர்  அமைப்பு இந்த சவாலான மற்றும் மாற்றங்களை எதிர்நோகும் காலங்களில் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

"இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரும் உலக வங்கியின் தலைவரும் காலநிலை மாற்றம், கடன் மற்றும் டிஜிட்டல் மாற்றம் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் தங்கள் நிறுவனங்களின் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதற்கான விருப்பத்தை அறிவித்தனர். வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி மற்றும் கொள்கை ஆதரவை வழங்குவதில் அவர்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.

மேலும், சர்வதேச நிதி நிறுவனங்கள், அரசுகள், அறக்கட்டளைகள் மற்றும் தனியார் துறையும் இன்னும் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

 

- பெர்னாமா-டிபா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.