NATIONAL

சிகாமாட் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் மூத்த மகனுக்கு பிரதமர் நிதியுதவி

8 செப்டெம்பர் 2023, 8:47 AM
சிகாமாட் சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரின் மூத்த மகனுக்கு பிரதமர் நிதியுதவி

கோலாலம்பூர், செப் 8 - கடந்த

வெள்ளிக்கிழமை ஜாலான் சிகாமாட்-

குவாந்தான் சாலையின் 5வது கிலோமீட்டரில்

நிகழ்ந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட

விபத்தில் தனது பெற்றோர் மற்றும் நான்கு

உடன்பிறப்புகளை இழந்த அப்துல் ரஹ்மான்

அமீர் ருடினுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

இப்ராஹிம் தனது தனிப்பட்ட பங்களிப்பை

வழங்கினார்.

19 வயதான அப்துல் ரஹ்மானிடம் அந்த

நிதியுதவியை தனது அரசியல் செயலாளர்

அகமது ஃபர்ஹான்

பவுஸிசி ஒப்படைத்ததாக அன்வார் தனது

முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனையை எதிர்கொள்வதில்

ரஹ்மான் வலுவாக இருப்பதற்கு

பிரார்த்தனை செய்யும் அதே வேளையில்

அவருக்கு உதவி நல்கும்படியும் நண்பர்களை

நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர்

தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, ரஹ்மானின்

பெற்றோர் அமீர் ருடின் இஸ்மாயில் (வயது

46), நோரஹிமா நூர் முஹம்மது (43) மற்றும்

நான்கு இளைய உடன்பிறப்புகளான

ஃபாத்திமா துல்சாஹ்ரா (வயது 17), ஸ்ரீ

கதீஜா அகிலா (வயது13), ருபைததுல்

அஸ்யாரியா மற்றும் முஹம்மது அஸ்யக்ராவி

(வயது 10) ஆகியோர் பயணித்த பெரோடுவா

அல்சா கார்

லோரியுடன் மோதியதில் உயிரிழந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.