ஜோகூர் பாரு, செப் 8 - ஜோகூர் இடைத்
தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைவதற்கு
இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியுள்ள
நிலையில் பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளர் சுஹைஸான் காயாட் தனது
இறுதிக் கட்டப் பிரசாரத்தை
தீவிரப்படுத்தியுள்ளார்.
நாளை தனது தலைவிதியை வாக்காளர்கள்
தீர்மானிப்பதற்கு முன் ஹராப்பான்-
பாரிசான் நேஷனல் கோட்டைகள் என்று
அறியப்படும் பகுதிகளில் இப்போது அவர்
தீவிர
கவனம் செலுத்துகிறார்.
தாமும் கட்சியின் இயந்திரங்களும்
கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட வாக்குச்
சாவடி மையங்களுக்கும் பிரசாரம்
மேற்கொண்டு விட்டதாகவும் விட்டதாகவும்
இன்று அவர்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்குச்
செல்வார்கள் என்றும் சுஹைஸான் கூறினார்.
இறைவன் அருளால் வாக்காளர்களிடமிருந்து
ஒரு நல்ல ஆதரவை நாங்கள் பெற்றுள்ளோம்.
இந்த ஆதரவு நாளை வாக்குகளாக மாறும்
என்று நாங்கள் நம்புகிறோம். அதே சமயம்,
அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு
தொடர்ந்து போராடுவோம் என்று அவர்
சொன்னார்.
இன்றிரவு நாங்கள் பெரிய அளவில்
இறுதிப் பிரசாரத்தை நடத்தவிருக்கிறோம்.
அதில் ஹரப்பான்-பாரிசான் தலைவர்கள்
கலந்துகொள்வார்கள். இந்த இறுதி நிகழ்வு
மக்களின் வாக்குகளை ஈர்க்கும் என்று
நாங்கள் நம்புகிறோம் என்று அவர் நேற்றிரவு
கம்போங் பாசிர் தம்போயில் நடைபெற்ற
இளைஞர்களுடனான ஒரு நிகழ்ச்சிக்குப் பின்
செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பூலாய் தொகுதியில் பெரிக்கத்தான்
நேசனலின் சுல்கிப்லி ஜாபர் மற்றும்
சுயேட்சை வேட்பாளர் சம்சுதீன் முகமது பவுசி
ஆகியோருடன் சுஹைஸான் களம்
காண்கிறார்.
கடந்தஜூலை 23 அன்று தற்போதைய
டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப்
இறந்ததைத் தொடர்ந்து புலை
நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம்
மாநில இடைத்தேர்தல்கள்
நடைபெறுகின்றன.
நாளை வாக்குப்பதிவு.


