கோலாலம்பூர், செப்டம்பர் 8: அரச மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) அரசியல்வாதிகளின் அதிகாரத்திற்கு அப்பால் செயல்படும் , குறிப்பாக 3R பிரச்சனைக்கு (இனம், மதம் மற்றும் அரசு) ஆகும் என காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசைன் வலியுறுத்துகிறார்.
3 ஆர் விவகாரத்தில் பி.டி.ஆர்.எம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை மாறாக பொதுமக்கள் சம்பந்தப்பட்டால் அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றார்.
"உதாரணமாக, கெடாவின் மந்திரி புசார் (டத்தோஸ்ரீ முஹம்மட் சானுசி முகமட் நோர்) மீதான அவதூறு வழக்கில் நள்ளிரவில் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை நாங்கள் கைது செய்தோம்.
"இந்த 3R ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். எந்த அரசியல் கட்சி ஆட்சியில் உள்ளது என்பது முக்கியமில்லை" என்று அவர் இன்று செராஸ் பிடிஆர்எம் கல்லூரியில் 4 வது தேசிய தடயவியல் கருத்தரங்கம் 2023 இன் நிறைவு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சில தரப்பினர் சமூக வலைதளங்கள் மூலம் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ரஸாருடின் மேற்கண்டவாறு கூறினார்.
முந்தைய அரசாங்க ஆட்சியின் போதும் 3R பிரச்சினைகள் தொடர்பாக பி.டி.ஆர்.எம் கடுமையான நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
"நாங்கள் குறிப்பாக அரசர்கள் சம்பந்தப்பட்ட அவமதிப்புகள் மீது தீவிர நடவடிக்கை எடுப்போம். நாட்டில் உள்ள ஒன்பது மலாய் மன்னர்கள் அவமதிக்கப்படுவதையோ அல்லது அவதூறு செய்யப்படுவதை காண விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
– பெர்னாமா








