NATIONAL

வீட்டில் மூவரின் உடல்கள் மீட்பு- தற்கொலை என போலீஸ் சந்தேகம்

8 செப்டெம்பர் 2023, 2:52 AM
வீட்டில் மூவரின் உடல்கள் மீட்பு- தற்கொலை என போலீஸ் சந்தேகம்

கோலாலம்பூர், செப் 8 - இங்குள்ள கம்போங்

பாரு அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி

குடியிருப்பில் மூன்று பேர் இறந்து கிடக்கக்

காணப்பட்டனர். அவர்கள் தற்கொலை

செய்து கொண்டிருக்கலாம் என

சந்தேகிக்கப்படுகிறது.

அந்த உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டது

தொடர்பில் நேற்று காலை 7.31 மணியளவில்

உள்ளூர்வாசியிடமிருந்து தங்களுக்கு தகவல்

கிடைத்ததாக சிலாங்கூர் காவல்துறைத்

தலைவர் டத்தோ

ஹுசேன் ஓமார் கான் கூறினார்.

அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட

சோதனையில் 42 வயது பெண், 14 வயது

சிறுமி மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரின்

உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அனைத்து

உடல்களும் முழு ஆடையுடன் காணப்பட்டன

என்று அவர் அறிக்கை ஓன்றில் கூறினார்.

சம்பவ இடத்தில் உயில் மற்றும் பணம்

அடங்கிய உறை ஒன்றும்

கண்டுபிடிக்கப்பட்டதாக ஹுசேன்

சொன்னார்.

மலேசிய தேசிய பல்கலைக்கழக

மருத்துவமனையின் தடயவியல் உடற்கூறு

குழு சம்பவ இடத்தில் மேற்கொண்டச்

சோதனையில், சம்பந்தப்பட்ட உடல்கள்

கண்டெடுக்கப்பட்ட அறையின்

அனைத்து கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஒட்டு

வில்லை டேப் கொண்டு இறுக்கமாக

மூடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தடயவியல் குழுவினர் அறையிலுள்ள

சோபாவின் அடியில் வைக்கப்பட்டிருந்த கரி

மற்றும் தீ பற்றவைக்கும் கருவி

ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். அம்மூவரும்

இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக

இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இம்மரணத்திற்கான காரணம் மற்றும்

இச்சம்பவத்தில் குற்றத் தன்மை உள்ளதா

என்பதைக் கண்டறிய விசாரணை

நடத்தப்பட்டு வருகிறது

என்று ஹூசேன் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.