ANTARABANGSA

ஆவணங்கள் இல்லாத இந்தோனேசியத் தொழிலாளர்கள் தாயகம் அனுப்பப்பட்டனர்

6 செப்டெம்பர் 2023, 4:15 AM
ஆவணங்கள் இல்லாத இந்தோனேசியத் தொழிலாளர்கள் தாயகம் அனுப்பப்பட்டனர்

ஜாகர்த்தா, செப் 6- முறையான ஆவணங்கள் இல்லாத

பல்லாயிரக்கணக்கான இந்தோனேசியத் தொழிலாளர்கள் தாயகத்திற்கு

திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

தெரிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களின் ஆவண விவகாரம் மிகவும் கடுமையானதாக

கருதப்பட்டாலும் நீதிமன்ற நடவடிக்கையின்றி இவ்விவகாரத்தைக்

கையாள்வதற்கான வழிகளை மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக

அவர் சொன்னார்.

பிடிபட்டவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்புவதாக இருந்தால் அந்த

நடவடிக்கையை விரைவுபடுத்துவோம் என்று நேற்று நடைபெற்ற

“அன்வாருடன் சந்திப்பு“ நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்

தெரிவித்தார்.

இந்தோனேசிய அதிபர் ஜோக்கே விடோடோ கடந்த ஜூன் மாதம்

மலேசியாவுக்கு வருகை புரிந்தப் பின்னர் மலேசியாவிலுள்ள

இந்தோனேசியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான

நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உள்நாட்டு

ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் விவாதிக்கப்பட்ட தென்சீனக் கடல்

விவகாரம் குறித்து கருத்துரைத்த அன்வார், இவ்விகாரத்தில் தாங்கள்

நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதோடு தங்கள் உரிமையைக் காப்பதிலும்

இது குறித்து சீனாவுடன் விவாதிப்பதிலும் ஆசியான் உறுதியான

நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

வரும் 2026 ஆசியான் உச்சநிலை மாநாட்டை பிலிப்பைன்ஸ் ஏற்று

நடத்துவது என ஆசியான் தலைவர்கள் எடுத்து முடிவைத் தாம்

வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.