NATIONAL

டத்தோ முகமட் தாமிஸ் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட முதலீட்டு விளம்பரம் போலி

5 செப்டெம்பர் 2023, 1:34 PM
டத்தோ முகமட் தாமிஸ் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட  முதலீட்டு விளம்பரம் போலி

ஷா ஆலம், செப் 5: முன்னாள் சிலாங்கூர் முஃப்தி டத்தோ

முகமட் தாமிஸ் அப்துல் வயிட்டின் பெயரைப் பயன்படுத்தி

வெளியிடப்பட்ட முதலீட்டு விளம்பரம் போலியானது என்பதை

சிலாங்கூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

செப்டம்பர் 3 அன்று முகமட் தாமிஸ் காவல்துறையில் புகார் அளித்து,

``முதலீட்டாளர் நகரம்`` என்ற பெயரில் முகநூலில் வெளியிடப்பட்டுள்ள

விளம்பரத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்ததாகச்

சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ சைன் ஓமர் கான்

தெரிவித்தார்.

விளம்பரம் பொய்யானது மற்றும் அதற்கும் முகமட் தாமிஸ்க்கும்

எந்த தொடர்பும் இல்லை. அதே நேரத்தில் அச்சம்பவம் தொடர்பான

புகார் விரிவான விசாரணைக்காக மலேசிய தகவல் தொடர்பு மற்றும்

மல்டிமீடியா கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது; என்று அவர் அறிக்கை

ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், முக்கிய நபர்களின் அடையாளத்தைப் பயன்படுத்தி சமூக

ஊடகங்களில் வெளிடப்படும் விளம்பரங்கள் மற்றும் சலுகைகளால்

பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் ஹுசைன் அறிவுறுத்தினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.