NATIONAL

பிரசிடெண்ட் கோப்பையின் அரையிறுதிக்குச் சிலாங்கூர் எஃப்சி முன்னேறியது

5 செப்டெம்பர் 2023, 1:20 PM
பிரசிடெண்ட் கோப்பையின் அரையிறுதிக்குச் சிலாங்கூர் எஃப்சி முன்னேறியது

ஷா ஆலம், செப் 5: நேற்று சிலாங்கூர் எஃப்சி யின் 20 வயதுக்குட்பட்டோருக்கான அணி 2023 ஆம் ஆண்டுக்கான பிரசிடெண்ட் கோப்பையின் அரையிறுதிக்கு 4-1 என பெனால்டியில் ஸ்ரீ பகாங் எஃப்சியை தோற்கடித்து முன்னேறியுள்ளது.

இந்த போட்டி மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள அரினா அரங்கத்தில் நடைபெற்றது. பெனால்டி மூலம் போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் முன், இரு அணிகளும் கோல் ஏதும் இன்றி சமநிலையில் இருந்தன.

சிலாங்கூர் எஃப்சி அணியைப் பிர்தௌஸ் தான் பயிற்சியளித்தார். மேலும், இந்த அணி செப்டம்பர் 11 மற்றும் 18 ஆம் தேதிகளில் நெகிரி செம்பிலான் அணியை எதிர்கொள்ளும்.

சிலாங்கூர் எஃப்சி முதல் அரையிறுதியை மலாயா பல்கலைக்கழகத்தில் உள்ள அரினா அரங்கத்தில் தொடங்கும் பின் இரண்டாவது போட்டி துவான்கு அப்துல் ரஹ்மான் பரோய் அரங்கத்தில் நடைபெறும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.