ANTARABANGSA

கட்டாரில் முதலாவது  கொரோனா வைரஸ் EG.5  வகை திரிபு கண்டு பிடிப்பு

1 செப்டெம்பர் 2023, 3:00 AM
கட்டாரில் முதலாவது  கொரோனா வைரஸ் EG.5  வகை திரிபு கண்டு பிடிப்பு

டோஹா, செப் 1 - கத்தார் நாட்டில் முதல் கொரோனா வைரஸ்  EG.5 திரிபு கண்டறியப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நோய்த்தொற்றுகளின் சரியான எண்ணிக்கையை அமைச்சு குறிப்பிட வில்லை.  இச்சம்பவங்கள் சிறிய அறிகுறிகளை கொண்டிருப்பதால் நோயாளிகள்  மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று அது  கூறியது.

புதிய கோவிட்-19 துணை மாறுபாடு தொடர்பான தொற்றுநோயியல் நிலைமையை அமைச்சு  உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது  என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 வயதானவர்கள் மற்றும் அடிப்படை சுகாதார பிரச்சனை உள்ளவர்கள் போன்ற நோய்த் தாக்கச் சாத்தியம்  அதிகம் உள்ளவர்கள் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அமைச்சு வலியுறுத்தியது.

முகக் கவரி அணிவது, வழக்கமான  சுகாதாரத்தை கடைபிடிப்பது மற்றும் நெரிசலான இடங்களில் கூடல் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடைமுறைகளை  அது பரிந்துரைக்கிறது.

EG.5 என்பது ஒமிக்ரோன் XBB.1.9.2 இன் துணைத் திரிபு ஆகும்.  முதலாவது EG.5 தொடர்பான சம்பவம் கடந்த பிப்ரவரியில் கண்டறியப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.