ஷா ஆலம், ஆக 29- நடிகரும் நிகழ்ச்சி அறிவிப்பாளருமான அகமது நபில்
அகமது வீட்டில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட
வேலையில்லா நபர் ஒருவருக்கு ரெம்பாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 3,000
வெள்ளி அபராதம் விதித்தது.
நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை பாட்ஸ்ரில்
அக்மால் அப்துல் ஹனிப் (வயது 31) ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து
மாஜிஸ்திரேட் கார்த்தினி கஸ்ரான் இந்த தீர்ப்பை வழங்கியதாகப் பெரித்தா
ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தாண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி இரவு 7.50 மணியளவில் கம்போங்
செனாமான தெங்கா ரெம்பாவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவ்வாடவர்
மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த வீட்டின் கதவை பலவந்தமாகத் தள்ளி உள்ளே நுழைந்த அந்த
ஆடவர் அவ்விட்டிலிருந்த உணவை உண்டு, ஓய்வெடுத்து பின்னர்
உறங்கியுள்ளதை அவ்வீட்டை பராமரித்து வரும் அகமது நபிலின்
சகோதரர் கண்டுள்ளார்.
அந்த வீட்டில் நடத்தப்பட்ட சேதனையில் சந்தேக நபருக்குச் சொந்தமான
டி-சட்டை மற்றும் டிரக்சூட்டும் அதன் பாக்கெட்டில் அடையாளக்கார்டும்
இருந்துள்ளது.
தண்டனைச் சட்டத்தின் 448 பிரிவின் கீழும் தண்டனை விதிக்க வகை
செய்யும் தண்டனைச் சட்டத்தின் 442வது பிரிவின் கீழ் அவ்வாடர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டது.








