NATIONAL

போதைப் பழக்கத்திற்கு தேவை சிகிச்சையே! சிறைவாசம் அல்ல- அமைச்சர் ஜலிஹா கூறுகிறார்

29 ஆகஸ்ட் 2023, 2:34 AM
போதைப் பழக்கத்திற்கு தேவை சிகிச்சையே! சிறைவாசம் அல்ல- அமைச்சர் ஜலிஹா கூறுகிறார்

கோலாலம்பூர், ஆக 29- போதைப் பழக்கம்

என்பது ஒரு வகையான கடும் நோய் ஆகும்.

இது தடுப்புக்காவல் அல்லது சிறைவாசம்

மூலம் அல்லாமல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு

மூலம் குணப்படுத்தப்பட வேண்டும் என்று

சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா

கூறினார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை

அளிப்பதற்கான இடம் சிறைச்சாலை அல்ல

என்றும், இது அவர்கள் ஆக்ககரமான

சமூகமாக செயல்படுவதைத் தடுக்கும் என்றும்

அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு

அடிமையானவர்களுக்கு கல்வி வழங்கும்

கடைசி வழி சிறைச்சாலை அல்ல என்றும்

அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற 2023ஆம்

ஆண்டிற்கான முதலாவது மலேசிய போதைப்

பழக்கம் மற்றும் தடயவியல் மனநலக்

கருத்தரங்கில் உரையாற்றிய போது

அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை

மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் பொது

சுகாதாரக் கண்ணோட்டத்திற்கு வேறுபட்ட

முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது

அவசியம் என்றார் அவர்.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள்

விஷயத்தில்

சட்ட அமலாக்கத்திற்கும் மருத்துவ

சிகிச்சைக்கும் இடையில் பல

இடைவெளிகளும் சவால்களும் உள்ளன

என்பது அங்கீகரிக்க வேண்டும். மேலும் இந்த

விஷயத்தைத் தீர்ப்பதில் சிறந்த வழியை

சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மறுவாழ்வு மையங்களில் சட்டப்பூர்வ

சவால்கள் தவிர்த்து இதர சவால்களும்

சவால்கள் உள்ளன. குறிப்பாக போதைக்கு

அடிமையானவர்கள் ஈர்ப்பு குறைபாடு

அல்லது போதைப்பொருள் காரணமாக உடல்

மற்றும் மனநல பிரச்சனை போன்ற

அறிகுறிகளுடன் போராடுகிறார்கள்.

இது ஒரு பயனுள்ள சிகிச்சை திட்டத்தை

வகுப்பதை கடினமாக்குவதோடு சரியான

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு முயற்சிகளைத்

தடுத்து சட்டப்பூர்வ

செயல்முறையை தாமதப்படுத்துகிறது என்று

அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.