கோலாலம்பூர், ஆக 28 - வரும் ஆகஸ்டு
31ஆம் தேதி புத்ராஜெயாவில் நடைபெறும்
தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்து
கொள்ளும் வருகையாளர்கள் பயணம்
இலகுவாக இருப்பதற்கு ஏதுவாக பொது
போக்குவரத்தைப் பயன்படுத்த
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த தேசிய தின் கொண்டாட்டத்தில் சுமார்
100,000 பார்வையாளர்களை கலந்துக்
கொள்ளக்கூடும் என்பதால் பொதுமக்கள்
தங்களையும் தங்கள்
குழந்தைகளையும் பாதுகாத்துக்
கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க
வேண்டும் என தகவல் தொடர்பு மற்றும்
இலக்கவியல் அமைச்சின் தலைமைச்
செயலாளர் டத்தோ முகமது பவுசி முகமது
இசா கேட்டுக் கொண்டார்.
தேசிய தினத்தை கொண்டாடும்
அதேவேளையில் போக்குவரத்து
விதிகளையும் அதிகாரிகளின்
உத்தரவுகளையும் முறையாகப் பின்பற்றி
நடந்த கொள்ளுங்கள் என அவர்
அறிவுறுத்தினார்.
எங்களிடம் பேருந்து வசதிகள் உள்ளன.
புத்ராஜெயாவில் காலை 4 மணி முதல்
பிற்பகல் 2 மணி வரை பேருந்து சேவையை
நாடி புத்ரா பேருந்து நிறுவனம் வழங்கும்.
மேலும் புத்ராஜெயா சென்ட்ரல் மற்றும்
புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில்
இரண்டு பயணிகளை
ஏற்றும் இடங்கள் உள்ளன. இந்த
வழித்தடத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒரு
முறை பஸ்கள் இயங்கும் என அவர் கூறினார்.
பார்வையாளர்களின் வசதிக்காக பார்க்கிங்,
உணவு உண்ணும் இடங்கள், மருத்துவக்
கூடாரங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்ட
பல வசதிகளும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்தார்.
2023 தேசிய தின கொண்டாட்ட
அணிவகுப்பில் பல்வேறு நிறுவனங்களைச்
சேர்ந்த 65 குழுக்களில் இருந்து 16,000 க்கும்
மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அவர்
கூறினார்.








