NATIONAL

துவாங்கு முஹ்ரிஸ் கிண்ண ஸ்குவாஷ் போட்டி- சிவசங்கரி சாம்பியன் பட்டத்தை வென்றார்

28 ஆகஸ்ட் 2023, 6:09 AM
துவாங்கு முஹ்ரிஸ் கிண்ண ஸ்குவாஷ் போட்டி- சிவசங்கரி சாம்பியன் பட்டத்தை வென்றார்

கோலாலம்பூர், ஆக 28 - நெகிரி செம்பிலான்

ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் கிண்ண

ஸ்குவாஷ் போட்டியில் தேசிய ஸ்குவாஷ்

விளையாட்டாளரான

எஸ். சிவசங்கரி சாம்பியன் பட்டத்தை

வென்றார்.

பெண்களுக்கான இறுதியாட்டத்தில்

சிவசங்கரி 11-8. 11-8 11-9 என்ற புள்ளிக்

கணக்கில் அய்ரா அஸ்மானை வீழ்த்தினார்.

சிரம்பான் டான்ஸ்ரீ டத்தோ ஹாஜி முகமது

சைட்

விளையாட்டு தொகுதியில் நடைபெற்ற இந்த

இறுதியாட்டத்தில் எதிர்பார்க்கட்டதைவிட

மிக எளிதாக 26 நிமிடங்களில் சிவசங்கரி

வெற்றி பெற்றார்.

24 வயதுடைய சிவசங்கரி கடந்த ஜூன்

மாதம் ஹங்காங்கில் நடைபெற்ற ஆசியன்

சாம்பியன்ஷீப் போட்டியில் இரண்டாவது

இடத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய

விளையாட்டுப் போட்டியில் மகளிர்

ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில்

இரண்டு தங்கப் பதக்கங்களை பெற

சிவசங்கரி இலக்கு கொண்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.