2,090 காகங்கள் சுட்டுக் கொல்லப் பட்டன

28 ஆகஸ்ட் 2023, 4:08 AM
2,090 காகங்கள் சுட்டுக் கொல்லப் பட்டன

ஷா ஆலம், ஆகஸ்ட் 28: கடந்த சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) மேற்கொண்ட நடவடிக்கையில் மொத்தம் 2,090 காகங்கள் சுட்டுக் கொல்லப் பட்டன.

இந்த நடவடிக்கை பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள 19 இடங்களில் காலை 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இதில் 35 துப்பாக்கி சுடும் வீரர்கள் இடம்பெற்றதாக மாநகராட்சி  அறிவித்துள்ளது.

"நகரைச் சுற்றியுள்ள வணிக வளாகங்கள் மற்றும் சொத்துக்களை மாசுபடுத்தும் மற்றும் சுகாதார பிரச்சனைகளை அடிக்கடி ஏற்படுத்தும் காகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைத்த பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களுக்கு நன்றி" என்று எம்பிபிஜே முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் அஸ்ஹன் முகமட் அமீர் அவர்களால் எம்பிபிஜே தலைமையகம் பெட்டாலிங் ஜெயாவில் நிறைவு செய்யப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.