மலாக்கா, ஆகஸ்ட் 28: பூர்வீகக் குடியினர் சட்டம் 1954 (சட்டம் 134)ஐ நடைமுறைப்படுத்துவதற்கான ஆய்வுகள் மற்றும் அமர்வுகள் ஓராங் அஸ்லி மேம்பாட்டுத் துறையால் (ஜாகோவா) தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதன் இயக்குநர் ஜெனரல் டத்தோ சபியா முகமட் நோர் கூறினார்.
நில உரிமை, திருமண பதிவு மற்றும் ஓராங் அஸ்லி குழந்தைகளின் பிறப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சட்டம் 134 உள்ளடக்கி உள்ளது என்றார்.
"அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகளில் ஓராங் அஸ்லி சமூகம் மற்ற சமூகம் போல் சமமான நில உரிமை (சட்டம் 134 இன் அதிகாரம் மூலம்) கொண்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்.
"இது குறிப்பிட்ட மக்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்க முடியும்" என்று அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரி, ஓராங் அஸ்லி சமூகத்தின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பல தடைகள் இருப்பதால், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வது முக்கியம் என்று கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சராகவும் இருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.


