ஜோகூர் பாரு, ஆக 28 - பூலாய்
நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம்
சட்டமன்ற இடைத்தேர்தல்களில்
பக்காத்தான் ஹராப்பான் சார்பில்
போட்டியிடும் அமானா கட்சி
வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்ய
ஒற்றுமை அரசாங்கக் கூட்டணியில் உள்ள
அனைத்துக் கட்சிகளுடன் ஜசெக
ஒத்துழைக்கும்.
அவ்விரு இடங்களையும் தக்க வைத்துக்
கொள்வதை உறுதி செய்ய அனைத்துக்
கட்சிகளின் ஒத்துழைப்பும் மிக முக்கியம்
என்று ஜசெக துணைப் பொதுச் செயலாளர்
லீவ் சின் டோங் கூறினார்.
அவ்விரு தொகுதிகளிலும் எங்களுக்கு
(ஹராப்பான்) வெற்றி வாய்ப்பு இருப்பதாக
நான் கருதுகிறேன். ஆனால் தேர்தல்
பிரச்சாரத்தில் கடினமாக உழைக்க
வேண்டும் என்பதோடு எந்த சவால்களையும்
எதிர்கொள்ள தயாராகவும் இருக்க
வேண்டும் என்று அவர் அவர் சொன்னார்.
இந்த இடைத்தேர்தலில் இரண்டு
ஹராப்பான் வேட்பாளர்களும் வெற்றிபெற
உதவுவதற்கான
ஜசெகவின் தயார் நிலை குறித்து
கருத்துரைக்கையில் ஜோகூர் மாநில ஜசெக
தலைவருமான அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
ஜோகூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்
சுஹைசன் கையாட் ஹராப்பான் கூட்டணி
சார்பில் பூலாய் தொகுதியில் களமிறங்கும்
வேளையில் அவரை எதிர்த்து பெரிக்கத்தான்
நேஷனல் வேட்பாளரான சுல்கிப்லி ஜாஃபர்
மற்றும் சுயேச்சையாக கோலாலம்பூர்
பயனீட்டாளர் பாதுகாப்பு சங்கத்தின்
தலைவரான சம்சுடின் முகமது பவுசி
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சிம்பாங் ஜெராம் இடைத்தேர்தலில்
ஹராப்பான் வேட்பாளர் நஸ்ரி அப்துல்
ரஹ்மான் போட்டியிடுகிறார். அவரை
எதிர்த்து பெரிக்காத்தான்
நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் மஸ்ரி
யாஹ்யா மற்றும் சுயேட்சை
வேட்பாளருமான எஸ்.ஜெகநாதன்
ஆகியோரும் களம் காண்கின்றனர்.




